Tuesday, March 29, 2011

மரண தண்டனை நிறைவேற்றுவதில் சீனா முதலிடம் வகிக்கிறது

பெய்ஜிங், மார்ச். 29- 
 
 
உலகநாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை லண் டனை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் 23 நாடுகளில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அதில், ஈரானில் 252 பேரும், வடகொரியாவில் 60 பேரும், ஏமனில் 53 பேரும், அமெரிக்காவில் 46 பேரும் இத்தண்டனை மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.   ஆனால், சீனாவில்தான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் கொடூர குற்ற வாளிகளுடன் சாதாரண குற்றம் புரிந்தவர்களும் அடங்குவர்.
 
ஆனால் சீனாவோ கடந்த 2009-ம் ஆண்டில் 714 பேருக்கும், 2010-ம் ஆண்டில் 527 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ளது. இதுபற்றிய அறிக்கையை ரகசியமாக பாதுகாத்து வருகிறது என்றும் அந்த நிறுவனம் கூறி உள்ளது.
 
அதிக அளவில் மரண தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் உலக நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது.

No comments: