Monday, March 7, 2011

திருக்குறள் ஒப்புவித்தலில் 4 வயது குழந்தை அசத்தல்

 
திண்டிவனம் : திண்டிவனத்தைச் சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை, திருக்குறள் ஒப்புவித்தலில் அசத்தி வருகிறாள். திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள வி.வி.ஆர்., காம்ப்ளக்சை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(41); திண்டிவனம் நகர கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு அமைப்பு செயலராக உள்ளார். இவரது மனைவி பிரபாவதி(35); வட ஆலப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணி புரிகிறார். இவர்களுக்கு கவிநிலவு(9) என்ற மகனும், பவித்ரா என்ற 4 வயது மகளும் உள்ளனர்.

சந்தைமேட்டு செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வரும் பவித்ரா, குழந்தை பருவத்தில் இருந்தே நினைவாற்றல் திறன் மிக்கவராக உள்ளாள். திருக்குறளில் பல்வேறு அதிகாரங்களில் 100க்கும் மேற்பட்ட குறள்களை சரளமாக ஒப்புவித்து அசத்துகிறாள். இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள், தமிழகத்தின் 32 மாவட்டங்கள், தமிழ் மாதங்கள், பாரதிதாசன் கவிதைகள், தேசத் தலைவர்களின் படங்களைப் பார்த்து அவர்களின் பெயர்களையும் கூறி, கேட்போரை வியக்க வைக்கிறாள். முருங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், 75 குறள்களை சரளமாகக் கூறி முதல் பரிசை பெற்றுள்ளாள். வரும் காலத்தில் மாநில அளவில் சாதனைப் பெண்ணாக உருவாக்குவதே லட்சியம் என, பவித்ராவின் பெற்றோர் தெரிவித்தனர்.

No comments: