Wednesday, September 28, 2011

நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்

போபால், செப்.27: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை ‘இலவச’ பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை. கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ?தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்...”பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக்  கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ராம் லீலா மைதானத்தை நோக்கி இவரும் சென்றார். ஆனால், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இவரால் அண்ணா ஹஸாரேவின் அருகில்கூட செல்ல முடியவில்லை. கூட்டத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட பகவான் தாஸ், அப்படியே திரும்பினார். ஆனாலும் அவர் மனத்தில் கொஞ்சமும் வருத்தம் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானதன்றோ?! 

Tuesday, September 27, 2011

பஞ்சர் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் பஞ்சர் ஜெல்

வாகனத்தில் செல்லும்போது நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்வது பஞ்சர் பிரச்னை. அலுவலகம் செல்லும்போதோ, அவசரமாக செல்லும்போதோ டயர் பஞ்சரானால் நமக்கு பிபி எகிறுவது இயல்பு. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஞ்சராகும்போது நேர்கொள்ளும் அவஸ்தைகள் ஏராளம்.

இந்த நிலையில், பஞ்சர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு திரவம் போன்று இருக்கும் பஞ்சர் ஜெல் உதவுகிறது. இந்த பஞ்சர் ஜெல்லை(பஞ்சர் சீலேண்ட் என்றும் கூறுகின்றனர்) சிறிய கம்ப்ரஷர் மூலம் வாகனங்களின் ட்யூப்களில் செலுத்துகின்றனர்.

டயர் பஞ்சராகும்போது ட்யூப் உள்ளே ஊற்றப்பட்டிருக்கும் இந்த திரவம் அந்த இடத்தில் உறைந்து பஞ்சராகாமல் பாதுகாக்கும். தற்போது பஞ்சர் கில்லர் என்ற நிறுவனம் தயாரிக்கும் பஞச்ர் ஜெல் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.

இந்த பஞ்சர் புரூப் ஜெல் எத்தனை முறை டயர் பஞசர் ஆனாலும் ட்யூப்களிலிருந்து காற்று வெளியேறாமல் தடுக்கும் என்று பஞ்சர் கில்லர் நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே, டயர் முழுவதும் இந்த ஜெல் பஞ்சர் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

முள், ஆணி என்று எதுவாயினும் டயர்களில் குத்தி பஞ்சராக்கினாலும், பஞ்சர் கில்லர் ஜெல் நிரப்பப்பட்ட டயர்களில் காற்று வெளியேறாது என்று அந்த நிறுவனம் தனது தயாரிப்புக்கு சான்றளிக்கிறது.

பஞ்சர் கில்லர் சில முக்கிய அம்சங்கள்:

டயர்களிலிருந்து காற்று கசிவு மற்றும் பஞ்சரனால் காற்று வெளியேறாமல் தடுக்கும்

டயர்களின் ஆயுளை கூட்டும்

சாதாரண டயரை பஞ்சர் புரூப் டயராக மாற்றும்

ட்யூப்களில் காற்றின் அளவை சீராக வைக்கும்

பஞ்சர் கில்லர் ஜெல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது

சாதாரண டயர் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களில் பயன்படுத்தலாம்

நிம்மதியான பயணத்தை வழங்கும்

இதுதொடர்பாக, பஞ்சர் கில்லர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது,"ஒரு லிட்டர் பஞ்சர் கில்லர் ஜெல் விலை ரூ.1,399க்கு விற்பனை செய்கிறோம். இருசக்கர வாகனங்களின் இரண்டு டயர்களுக்கும் சேர்த்து 600 மிலி இருந்தால் போதுமானது. எங்களிடம் ஆர்டர் செய்தால் எங்களது பிரதிநிதிகளே நேரில் வந்து டயர்களில் பஞ்சர் கில்லர் ஜெல்லை செலுத்திக்கொடுத்துவிடுவர்," என்று கூறினார்.

Tuesday, September 13, 2011

எழுத்தாளர் ஜெயலலிதா



முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர் புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!

ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ் புகழ் கிங்விஸ்வா).
கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர், எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின் உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.

பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன் எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள் சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர.. அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல் மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம் என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே எழுதியிருக்கிறார்.

இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர் கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான புனைவாகவே இது இருக்கிறது.

தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.
http://www.athishaonline.com/2011/09/blog-post.html

சென்னை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?போதுமான வசதிகள் இல்லாத அவலம்

பயங்கரவாதிகள் மிரட்டல், டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக தலைநகரான சென்னையில் செய்யப்பட்டுள்ள (?) பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவில் இல்லாததால், பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
நாட்டில் எந்த பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், சென்னை நகருக்கு உடனடியாக, "அலர்ட் மெசேஜ்' அனுப்பப்படுவது வழக்கம். மத்திய, மாநில உளவுத்துறைகளின் அறிக்கைகள் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறை செய்து வருகிறது.முக்கிய வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பயங்ரவாதிகளின் இலக்காக இருப்பதால், அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.நகர் முழுவதும் வாகன தணிக்கையில் முழுவீச்சில் போலீசார் ஈடுபடுவதும் தொடர்கிறது. சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், இத்தகைய முக்கிய இடங்களில் பாதுகாப்பு முழுமையாக இல்லை என்பது காவல்துறையின் ஒரு சாராரே வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ளும்வகையில் நடக்கும் சிறப்பு "ஆபரேஷன்'களிலும் இந்த பாதுகாப்பு குறைபாடு விவகாரம் வெளிப்படையாக தெரிந்துள்ளது. இத்தகைய குறைபாடுகள் குறித்து வெளிப்படையான விவாதமோ, குறைகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளோ முழுமையாக எடுக்கப்படுவதில்லை.
முக்கிய இடங்களில் பாதுகாப்புகுறைபாடு இருப்பது போல், சென்னையில் உள்ள லாட்ஜ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதை எத்தனை பேர் பின்பற்றுகின்றனர் என்பதை தொடர்ந்து போலீசார் கண்காணிக்க வேண்டும்.மேலும், பொது தொலைபேசி மற்றும் இன்டர்நெட் மையங்கள் வாயிலாக நிறைய எச்சரிக்கைகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை நடைமுறையில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை கண்காணிப்பதற்கு தனிப்பிரிவு அமைத்தால், பாதுகாப்பு மேலும் பலப்படும். இதற்கான ஏற்பாடுகளும் பலவீனமாகவே உள்ளது.பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், சென்னை நகரின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நவீன பாதுகாப்பு கருவிகளை போலீசாருக்கு வழங்குவதன் மூலமும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இது குறித்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், ""நாட்டில் எந்த ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும், தலைநகர போலீசார், "அலர்ட்' செய்யப்படுகின்றனர். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது. வாகன சோதனையும் நடக்கிறது.போதுமான அளவில் போலீசார் இல்லாததால், இப்பணியில் முழுவீச்சில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதே நேரத்தில், சோதனை உள்ளிட்ட போலீசாரின் நடவடிக்கைகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அச்சமடைய செய்யும். இதுவும் ஒருவகையான தடுப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டும்."மெட்டல் டிடெக்டர்' போன்ற கருவிகளை தாண்டி, நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், ஒரே நேரத்தில் பல இடங்களில், நவீன கருவிகளை பயன்படுத்துதல் என்பது சாத்தியமில்லாதது. அதே போல், இத்தகைய கருவிகளை கையாள்வது குறித்து, போதுமான பயிற்சிகளையும் வழங்க வேண்டியுள்ளது'' என்றார்.
தனியார் செயல்பாடு:காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காட்டிலும், தனியார் ஓட்டல்கள், நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் உள்ளே நுழையும் கார்கள் அனைத்தும் சோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன. தனிநபர்களும் சோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன.பிரபல தனியார் வங்கிகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலின் தீவிரம் உணர்ந்து, இவர்கள் தாங்களாகவே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறைமுக பாதுகாப்பில் பின்தங்கியுள்ளோம்:சென்னையின் பாதுகாப்பு குறித்து ஓய்வு பெற்ற டி.ஜி.பி., நட்ராஜ் கூறியதாவது:பாதுகாப்பு என்பது இரண்டு வகை. வெளிப்படையான பாதுகாப்பு ஒன்று. மறைமுக பாதுகாப்பு ஒன்று. ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசாரை குவிப்பது. வாகன தணிக்கையில் ஈடுபடுவது வெளிப்படையான பாதுகாப்பு. தகவல்களை சேகரித்து அதனடிப்படையில் ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்துவது என்பது மறைமுக பாதுகாப்பு. இந்த விஷயத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.பொதுவாக, வழக்குகள் அடிப்படையில் தகவல்களை சேகரிக்க வேண்டும். சிறிய வழக்காக இருந்தாலும் சரி, அதிலும் நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். இதற்கென கீழ்மட்டத்திலும் உயர் மட்டத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இப்போது இருக்கிற மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை, சரியான அளவில் டியூன் செய்ய வேண்டும். இதற்கென உள்ள மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும். சில இடங்களில் உயர் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் கூட, இவ்வாறான பாதுகாப்பை காணும் போது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட நினைப்பவர்கள் அஞ்சுவார்கள்.இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நிலை என்ன?
விமான நிலையம் : * இங்குள்ள "இன்லைன் ஸ்கேனர்' கருவி அடிக்கடி பழுதாவதால் சோதனையில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது*"ரன்வே'யில் திடீரென யாராவது நுழைந்து ஓடுகின்றனர். பிடித்து விசாரித்தால், ஒன்று அவர்களை குடிகாரன் என்றோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ கூறி அந்த விஷயத்தை அத்தோடு முடித்து விடுகின்றனர்.*சமீபத்தில் கார்கோ விமானத்தில் நுழைந்த சிறுவனை பிடிக்க பெரும்பாடு பட்ட சம்பவம் நடந்துள்ளது.*வாகன நிறுத்துமிடங்களிலும் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.
சென்ட்ரல் ரயில் நிலையம்:* இங்கு பிரதான வாயில்களில் மட்டுமே பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேன் கருவி உள்ளது. புறநகர் ரயில் நிலையம் அருகேயுள்ள வாயில், தபால் பிரிவு உள்ளிட்ட வாயில்களில் கேமரா கூட இல்லை.*"பிரீபெய்ட்' ஆட்டோ நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மட்டுமே உள்ளது. இதன் மூலம் எந்தளவிற்கு துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.* அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால், பயணிகள் நுழைந்து செல்லும் மெட்டல் டிடெக்டர் கருவியில், "ப்யூஸ்' கட்டாகி செயல் இழந்து விடுகிறது.* புறநகர் ரயில் நிலையத்தையும் சேர்த்து 48 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில பழுதாகி, இயங்காமல் உள்ளது.*வால்டாக்ஸ் சாலையில் உள்ள சரக்கு மையத்தில் கேமரா இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பார்சல்கள் இங்கு தான் பிரித்து அனுப்பப்படுகிறது.*எந்த கண்காணிப்பு கேமராவிலும் பதியாமல், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் வழியாக சுலபமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வரக்கூடிய அளவிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.எழும்பூர் ரயில் நிலையம்*சென்ட்ரலை போலவே இங்கும் பல நுழைவாயில்கள் உள்ளன. அனைத்திலும் கண்காணிப்பு என்பது குறைவே.* மூன்று நுழைவாயில்களில் மட்டும் மெட்டல் டிடெக்டர் கருவி உள்ளது. அனைத்தும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது.* கார் மற்றும் இருகர வாகன நிறுத்துமிடத்தில் கண்காணிப்பு கேமரா கூட இல்லைக்ஷ
கோயம்பேடு பஸ் நிலையம்:*பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள, பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் எந்த கண்காணிப்பும் இல்லை. இங்கு பயணிகள் போர்வையில் யார் வேண்டுமானாலும், சுலபமாக நுழைந்து கோயம்பேடு பஸ்நிலையத்திற்குள் செல்லலாம்.* போதுமான போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை.*சி.எம்.டி.ஏ., அமை த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்தவர்களே மெட்டல் டிடெக்டரில் பயணிகளை சோதனை செய்கின்றனர். இவர்களுக்கு எந்தளவுக்கு அதில் திறமை உள்ளது என்பது கேள்விக்குறியே.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=312111

Thursday, September 8, 2011

How did this happen? Amazing Photos

How did this happen? Its a mystery, Simply Wow!

FunOnTheNet - What happened here!

FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
 
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!