Friday, February 25, 2011

சூரிய ஒளியை பயன்படுத்தி "ஜீரோ டிஸ்சார்ஜ்': சாத்தியம் என்கிறார், இளம் ஆராய்ச்சியாளர்

திருப்பூர்: சூரிய ஒளியை பயன்படுத்தி, ஆர்.ஓ., சுத்திகரிப்பில் எஞ்சியுள்ள 15 சதவீத கழிவு நீரை எளிதாக ஆவியாக்கும் வழிமுறை களை, திருப்பூரை சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் பிரபு கண்டறிந்துள்ளார்.

திருப்பூர் சுற்றுப்பகுதியில் சாயம் மற் றும் பிளீச்சிங் நிறுவனங்களுக்கு தினமும் 6.50 கோடி தண்ணீர் பயன்படுத்தப்படு கிறது. வெளியேற்றப்படும் கழிவுநீரில், 85 சதவீதம் அளவுக்கு, ஆர்.ஓ., சுத்திகரிப்பு முறையில் தண்ணீராக பிரித்தெடுக்கப் படுகிறது. மீதியுள்ள 15 சதவீத கழிவுநீரை, "எவாப்ரேட்டர்' மூலமாக ஆவியாக்கியும், அவற்றில் எஞ்சும் கழிவை, "கிரிஸ்டலை சர்' மூலமாக உப்பாக பிரித்தெடுக்கவும், "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அறி முகம் செய்யப்பட்டது. சரியான வழி காட்டுதல் இல்லாததால், ஆர்.ஓ.,வுக்கு பின் வரும் சுத்திகரிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இக்கட்டான நிலையில், ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின், சூரிய ஒளியால் 100 சதவீத சுத்திகரிப்பை மேற்கொள்ள முடி யும் என்கிறார், திருப்பூரை சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர் பிரபு.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுத்திகரிப்பு நிலையங்களில் தற்போதுள்ள தொழில் நுட்பங்கள் பல்வேறு சிக்கல் களை உருவாக்குகின்றன. இதனால், எதிர் பார்த்தபடி எளிதாக 100 சதவீத சுத்திகரிப்பு செய்ய முடியவில்லை. சூரிய வெப் பத்தை ஒருங்கிணைத்து, ஆவியாக்கல் சுத்திகரிப்பை சரியாக செய்து முடிக் கலாம். "பேராபோலிக் ரிப்ளக்டர்', "பேராபோலிக் டிஸ்' மற்றும் "ஆப்டிக்கல் லென்ஸ்' மூலமாக சூரிய ஒளியை வெப்பமாக மாற்றி தேக்கி வைக்கலாம். ஒவ்வொரு படி நிலையிலும், "தெர்மிக் புளூய்டு' எண்ணெய் மூலமாக, வெப் பத்தை எடுத்து வந்து "தெர்மேபேர் பாய்லர்' மூலமாக இருப்பு வைக்கலாம். "பாய்லர் ஸ்டீம்' அல்லது ஏதாவதொரு முறையில் வெப்பப்படுத்தினால், "தெர் மிக்புளூய்டு' எண்ணெய் 700 டிகிரி வரை யிலான வெப்பத்தை உருவாக்கும். கழிவுநீரை ஆவியாக்கல் மூலமாக சுத்தி கரிப்பு செய்வதற்காக, பெரிய அளவில் "ஸ்டீல்' களம் அமைக்க வேண்டும். அதன் மேற்புறத்தில் கழிவுநீரை தேக்கி வைத்து, அதற்கு கீழ் அடுக்கு பகுதியில், "தெர்மிக் புளூய்டு' ஆயிலை எடுத்துச்சென்று, ஆவியாக்கலாம்.

"ஸ்டீல்' களத்தின் மேற் புறத்தில், கூம்பு வடிவில் மேற்கூரை அமைக்கும்போது, ஆவியாகும் கழிவுநீர் குளிர்ந்து, நல்ல தண்ணீராக திரும்ப பெறலாம். இதில் வெப்பம் அதிகமாகும் போது, கூரையின் மேற்புரத்தில் நல்ல தண்ணீரை தெளித்து, ஆவியை எளிதாக குளிர்விக்கலாம். சூடாக உள்ள "தெர்மிக்புளூய்டு' எண்ணெயை எடுத்துச்சென்று, மற்று மொரு களத்தில் தேக்கி கழிவுநீரை சுத்தி கரிப்பு செய்யலாம். சிறு சுத்திகரிப்பு மூல மாக, "தெர்மிக்புளூய்டு' எண்ணெயை மறு சுழற்சி முறையில் பெறலாம். இத்தகைய சூரியவெப்பத்தை ஒருங்கிணைத்து சுத்தி கரிப்பு செய்யும் முயற்சிக்கு அதிகப்படி யான இடம் தேவைப்படும். ஆனால், ஒருமுறை அமைத்தால், சுத்திகரிப்பை தொடர்ந்து செய்யலாம். மத்திய, மாநில அரசுகள் மரபுசாரா எரி சக்தியை பெற மானியம் வழங்கி ஊக்கு விக்கிறது. அதற்காக, சூரிய ஒளி மூலமாக இயக்கப்படும் சாதனங்களுக்கு மானியம் வழங்குகிறது. அவ்வகையில், மத்திய, மாநில அரசுகளிடம் பேசினால், சூரிய வெப்ப சுத்திகரிப்பு முறைக்கு, மானிய மும் கிடைக்கும். இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு விளக்கி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

No comments: