Monday, January 10, 2011

பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்தப் போகும் இந்தியா!


2050 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு, வாங்கும் சக்தி அடிப்படையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதோடு, சீனாவையும் முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வருகிற 2020 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாகவும், "2050ல் உலகம்" என்ற தலைப்பில், சந்தைகள் மற்றும் தொழில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

சமச்சீரான வாங்கும் திறன் அடிப்படையிலான பொருளாதார அளவீடுகளின் அடிப்படையிலேயே, ஒரு நாட்டின் ஜிடிபி எனப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.

அதன்படி, சமச்சீரான வாங்கும் சக்தி அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு உலகிலேயே நான்காவது சக்தியாக திகழ்ந்த இந்தியா, 2050 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும், அமெரிக்கா அப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

No comments: