Friday, April 1, 2011

ஜப்பான் போராடுவது ஏன்? : கதிர்வீச்சில் அப்படி என்ன தான் பாதிப்பு? (அவசியம் தெரிந்து கொள்க)

ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமைடந்தது.
கதிர்வீச்சை கட்டுப்படுத்த போராடும் விஞ்ஞானிகள்

இந்த பாதிக்கப்பட்ட அணுஉலையில் இருந்து பரவிய அணுக்கதிர்வீச்சு 6 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டன் பகுதியில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் ஷயரிலும், கிளாக்சோ பகுதியிலும் பரவியிருப்பது தெரியவந்தது.மேலும் சுவிற்சர்லாந்து, ஸ்பெயின் ஊடாக பிரான்ஸ் வரை இக்கதிர்வீச்சு பரவிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த இருவாரங்களுக்கு முதல் சுவிற்சர்லாந்தின் தினசரி பத்திரிகை ஒன்று, அன்றைய மாலை நேர வான்பரப்பு அன்னிச்சையான ஊதா நிறத்திலிருப்பது கண்டுவிட்டு, கதிர்வீச்சு தாக்கம் சுவிற்சர்லாந்திலும் சத்தம் போடாமல் பரவத்தொடங்கிவிட்டது என தெரிவித்திருந்தது. பேர்ன் அணு ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த கதிர்வீச்சு உயிருக்கு அபத்து விளைவிக்காதது ஆகும்.இதே போல அமெரிக்காவிலும் , ஜரோப்பாவிலும் மிகச்சிறிய அளவிலான கதிர்வீச்சு இருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது.

அணுஉலையில் தொடர்ந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது. அதைக்கட்டுப்படுத்த என்ஜினீயர்கள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து 6 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டனிலேயே பரவியுள்ள கதிர்வீச்சு ஜப்பானில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஒரு மனிதனின் உடல் முழுவதும் கதிர்வீச்சுக்கு உள்ளானால் கீழ்கண்ட அளவுத் தொடர்புடைய விளைவுகள் காணப்படும் 20- 25 ரேட்களில் கதிர்வீச்சு இருக்குமானல் இரத்த அணுக்களில் மாறுதல் தோன்றலாம்,50--100 ரேட் இருக்குமானல் இரத்த அணுக்கள் சிதைவடையும்,100- - 200 ரேட் இருக்குமானல் காயங்களும், உடல்நலக்குறைவும் ஏற்படும்.200 - 400 ரேட் இருக்குமானல் இயலாமையும், இறப்பும் நேரலாம். 400 ரேட் இருக்குமானல் 50சதம் இறப்பு வாய்ப்பு, 600 ரேட் இருக்குமானல்  இறப்பு நிச்சயம்.
பாதிப்புக்குள்ளான அணு உலைகள்

பெண்களுடைய சினைப்பைகள் 500ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்பட்டால் நிரந்தரமான மலட்டு தன்மை உண்டாகும். ஒவ்வொரு பெண்குழந்தையும் பிறக்கும் போதே தன் வாழ்நாளில் உற்பத்தி செய்ய வல்ல சினை மூட்டைகளுடன் தான் பிறக்கிறது. அதனால் சிறுகுழந்தைகள் கதிர்வீச்சுக்கு எதிர்படுமானால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். 500 - 600 ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் ஆண்களின் விந்து பைகளுக்கு நிரந்தர மலட்டுதன்மை நேர்கிறது.

ஒரு ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் ஐந்து வயது குழந்தையை விட அதே அளவு கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் மூன்றுமாத குழந்தைக்கு புற்றுநோய் தோன்றும் அபத்து அதிகம். முழு உடலும் கதிரவீச்சுக்கு ஆளாகையில் உடலில் பல உறுப்புகளில் புற்றுநோய் தோன்றலாம்.

ஹிரோஷிமா, நாகசாஹியில் 2ம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு வீச்சில் பிழைத்தவர்களை சோதனை  செய்து பார்த்ததில் அவர்களின் உடல் வழக்கமான 46 குரோமோசோம்களுக்கு பதிலாக 92 அல்லது 184 குரோமோசோம்கள் காணப்பட்டது.

ஐப்பானில் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு அபாயம் ஐப்பானுக்கு மட்டுமல்ல உலகமுழுவதுக்குமான அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments: