Friday, April 1, 2011

இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை 9.21% உயர்வு

இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9.21 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இதில் பெண்களின் படிப்பறிவு ஆண்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டிற்கான எண்ணிக்கையின்படி, நமது நாட்டு மக்கள் தொகையில் 74 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள். 26 விழுக்காட்டினர் படிப்பறிவு பெறாதவர்கள் ஆவர். 7 வயதிற்கு மேற்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கீட்டின்படி, பெண்கள் மக்கட் தொகையில் 53.67 விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். இது 2011ஆம் ஆண்டுக் கணக்கின்படி 65.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்த 10 ஆண்டுகளில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 விழுக்காட்டிலிருந்து 82.14 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

No comments: