Thursday, January 28, 2010

பிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி ஒற்றை பெடல் சைக்கிள் பயணம்



பேரூர் : பிளாஸ்டிக்கை தவிர்க்க வலியுறுத்தி ஊட்டி முதல் பேரூர் வரை 110 கி.மீ தூரம் ஒற்றை பெடல் சைக்கிளில் பயணமாக வந்து வாலிபர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.


ஊட்டி அருகே திருக்காந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத்(25); கூலிவேலை செய்கிறார். இவர் பசுமையை காத்திடவும், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விழிப்புணர்வு செய்ய முடிவு செய்தார். இதையடுத்து பிரசாத் ஊட்டியில் நேற்று காலை 8.00 மணிக்கு ஒற்றை பெடல் கொண்ட சைக்கிளில் தனது பயணத்தை துவக்கினார். பயணத்தை ஊட்டி டவுன் ரோட்டரி கிளப் தலைவர் சஞ்சீவ்குமார், தட்சிணாமூர்த்தி, ரவிபிரசாத் முன்னிலையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து 110 கி.மீ மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோவை வழியே ஒற்றை பெடலிலே சைக்கிளை ஓட்டியவாறு மாலை 3.00 மணிக்கு பேரூர் வந்தடைந்தார். அவருடன் காந்தல் பகுதியைச் சேர்ந்த சிட்டி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி மைய நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பைக்கில் பின்தொடர்ந்து வந்தனர். பேரூர் வந்த பிரசாத்துக்கு பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பிரசாத் பள்ளி மாணவர்களின் முன் 720 ஸ்ட்ராக்களை தனது வாயில் வைத்து சாதனை நிகழ்த்தினார்.


No comments: