Thursday, February 24, 2011

இவை, நிஜமல்ல கதை! : இப்படியும் உருவாக்கலாமா? (புகைப்படங்கள்)

இயற்கைக்கும், செயற்கைக்கும் இடையிலான பிண்ணல்கள் இவை.
சுவீடன் நாட்டு ஓவியரான ஜோஹன் தொர்ன்குவிஸ்ட்டின் முயற்சியில் உருவான இப்புகைப்படங்கள் Whimsical (ஒரு வித தூரிகை ஓவியம்) வகையை சேர்ந்தவை. Photoshop, Wiacom Cintiq ஆகியவற்றின் துணையுடன் அவர் இவற்றை உருவாக்கியிருக்கிறார். நிஜமாக இயற்கையில் படம்பிடித்த இப்புகைப்படங்களில் இப்படி பென்சில் ஓவியங்களை ஒன்றாக பிண்ணிப்பிணைக்க ஒவ்வொரு புகைப்படத்துக்கும் மேலாக சுமார் 50 ற்கும் மேற்பட்ட layers ஐ அடுக்கியிருக்கிறார்.

வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணங்கள், நிழல் அனைத்தும் பின்னால் உள்ள நிஜ புகைப்படங்களுடன் ஒட்டியிருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறார்.

விர்ரென பார்க்காமல், ஒவ்வொரு புகைப்படத்தையும் நிதானமாக பாருங்கள். ஜோஹனின் உழைப்பு தெரியும்!!
ஜோஹன் தொர்ன்குவிஸ்ட்டின் இணையத்தளம் http://www.snarlik.se/

No comments: