மத்திய கிழக்கில் கத்தரில் அதிக சம்பள உயர்வு.
2011 ல் ஓரளவு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மனித வள அதிகாரிகளுக்கு அதிக சம்பள உயர்வு.
அதிகரிக்கும் சீனர்களின் பரவல்.
ஐக்கிய அரபு அமீரகம் அதிகம் விரும்பப்படும் நாடு.
மத்திய கிழக்கின் புகழ் பெற்ற வேலை வாய்ப்பு இணைய தளம் நடத்திய ஆய்வின் முடிவுகளின் சாரம் இந்நேரம் வாசகர்களுக்காக.
2011ல் வளைகுடா நாடுகளில் தனியார் நிறுவனங்களில் சம்பள உயர்வு சுமாராக இருக்கும், அதாவது 6.6 சதவிகிதம் இருக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இவ்வாய்வு ஆறு வளைகுடா நாடுகளில் உள்ள 1400 நிறுவனங்களிலும் 32,000 நபர்களிடமும் எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வளைகுடா நாடுகளில் கத்தாரில் அதிகபட்சமாக 6.8 % ஊதிய உயர்வும், அதை தொடர்ந்து சவூதி அரேபியாவில் 6.7 %, ஓமனில் 6.4% மற்றும் குவைத்தில் 5.7 % ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் 5.2 % மற்றும் 4.9 % ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளின் சராசரி சம்பள உயர்வு
நாடு | 2010 | 2011 * |
கத்தார் | 6. 8 % | 7. 2 % |
சவூதி அரேபியா | 6. 7 % | 7. 0 % |
ஓமன் | 6. 4 % | 7. 0 % |
குவைத் | 5. 7 % | 5. 9 % |
ஐக்கிய அரபு அமீரகம் | 5. 2 % | 6. 3 % |
பஹ்ரைன் | 4. 9 % | 5. 1 % |
- - எதிர்பார்க்கப்படுவது
2010 ல் மக்களின் செலவழிக்கும் பழக்கம் அதிகரித்ததற்கேற்ப ரீடெய்ல் துறையில் அதிக பட்சமாக 6.4 % சம்பள உயர்வு கல்வி துறையில் குறைந்த பட்சமாக 3. 8 % சம்பள உயர்வும் இருந்தது. அது போல் மனித வளத்தில் பணி புரிகிறவர்கள் அதிக பட்சமாக 7. 1 % உயர்வும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சமாக 4. 3 % உயர்வும் இருந்துள்ளது.
சவூதி மற்றும் கத்தரில் அதிகரித்த வேலை வாய்ப்புகள் மற்றும் திறமையான ஊழியர்களை தக்க வைக்கவே நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஒப்பீட்டளவில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் இருந்ததால் ஆசியர்கள் சராசரியாக 6.1 % ஊதிய உயர்வும் மேற்கத்தியர்கள் 3.2 % ஊதிய உயர்வும் பெற்றுள்ளனர்
மத்திய கிழக்கின் வேலைவாய்ப்பில் புதிய அம்சமாக சீனர்களின் அதிகரிப்பை சொல்லலாம். வழக்கமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தொழிலாளர்களை தருவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது ஓரளவு சீனர்களை தருவிக்க ஆரம்பித்துள்ளன. சவூதியின் ரயில் திட்டம், கத்தாரில் தோஹா துறைமுகம் உள்ளிட்ட திட்டங்கள் சீன நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து ஆட்களை வரவைப்பதும் இதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.
No comments:
Post a Comment