Friday, February 11, 2011

உலகம் முழுவதும் ஒரே ஆண்டில் இயற்கை பேரழிவுக்கு 2 1/2 லட்சம் பேர் பலி: ஐ.நா.சபை தகவல்

நியூயார்க், பிப். 10-
 
என்றும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் பூகம்பம், புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டன.
 
ஹைதி, சிலி நாடுகளில் பூகம்பம், பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம் ரஷியாவில் காட்டுத்தீ, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் புயல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் கடந்த ஆண்டில் மட்டும் இயற்கை பேரழிவுக்கு 2 1/2  லட்சம் பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா.சபை தலைவர் பான் கீ மூன் தெரிவித்தார்.
 
மேலும் பான் கீ மூன் கூறியதாவது:-
 
இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க ஐ.நா.சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டு அழிவு அதிகமாக இருந்துள்ளது.
 
பூகம்பம், அதிக வெயில், வெள்ளம், பனிப்பொழிவு போன்ற காரணங்களால் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் கடந்த ஆண்டுதான் மிக மோசமாக அமைந்துள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: