Tuesday, November 3, 2009

ஊதிய உயர்வு-முன்னணி வகிக்கப் போகும் இந்தியா


ஹாங்காங்: ஆசியாவில் பொருளாதார மந்த நிலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது போலத் தெரிகிறது. காரணம், அடுத்த ஆண்டு ஆசிய நாடுகள் பலவற்றிலும், பெருமளவில் ஊதிய உயர்வு இருக்குமாம். ஆய்வு ஒன்று இந்த செய்தியைத் தெரிவித்துள்ளது.

இதில் இந்தியா முன்னணி வகிக்குமாம். கிட்டத்தட்ட 10 சதவீத ஊதிய உயர்வு இந்தியாவில் இருக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவில் 8.7 சதவீதமும், சீனாவில் 6.7 சதவீத அளவிலும் ஊதிய உயர்வு இருக்குமாம்.

ஜப்பான் இந்த விஷயத்தில் மோசமாக இருக்குமாம். அங்கு ஊழியர்ளுக்கு 2.1 சதவீத ஊதிய உயர்வுதான் இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

ஹெவிட் அசோசியேட்ஸ் நடத்திய இந்த ஆய்வில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களிடம் ஊதிய உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதுதவிர அடுத்த ஆண்டு இந்தியாவில் 6 சதவீத அளவிலும், சீனாவில் 8.3 சதவீத அளவிலும் ஊதிய உயர்வு நிறுத்தம் இருக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுவே ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 12 முதல் 14 சதவீதமாக இருக்கும்.

ஆசிய நாடுகளில் இந்த ஆண்டு ஊதிய உயர்வு விகிதமும், அடுத்த ஆண்டு ஊதிய விகித உயர்வும் குறித்த ஒரு பட்டியல்...

இந்தியா - 6.3 (2009), 9.2 (2010)
இந்தோனேசியா - 6.0, 8.7
சீனா - 4.5, 6.7
பிலிப்பைன்ஸ் - 4.3, 6.4
மலேசியா - 4.1, 5.2.
தாய்லாந்து - 3.4, 4.7
கொரியா - 2.7, 5.1
மக்காவ் - 2.6, 2.5
ஆஸ்திரேலியா - 2.1, 3.4
நியூசிலாந்து - 2.1, 3.1.
தைவான் - 1.8, 3.1
சிங்கப்பூர் - 1.8, 2.6
ஹாங்காங் - 1.4, 2.9
ஜப்பான் - 1.2, 2.1

No comments: