புதுடில்லி: தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார், லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில், கடந்த 2009-10ம் நிதியாண்டில், தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநில ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ரூபாய். இந்த பட்டியலில் சண்டிகார் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. சண்டிகாரின் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 912 ரூபாய். மூன்றாம் இடத்தில் உள்ள டில்லியின் ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 886 ரூபாய். இப்பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தின் ஆண்டு தனிநபர் வருமானம் 16 ஆயிரத்து 119 ரூபாய். தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 62 ஆயிரத்து 499 ரூபாய்.
No comments:
Post a Comment