Wednesday, March 23, 2011

தனி நபர் வருமானத்தில் டெல்லியை முந்திய மும்பை; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கிடைக்கிறது

மும்பை, மார்ச் 23-
 
2009-10  நிதியாண்டில் பெருநகரங்களுக்கிடையேயான தனி நபர் வருமானத்தில் டெல்லியை மும்பை முந்தி இருப்பதாக  அந்த மாநிலத்தின் பொருளாதார மதிப்பீட்டுக்குழு  தெரிவிக்கிறது. மராட்டியம்  மற்றும் தனிநபர் வருமான உயர்வுக்கு உதவிகரமாக  புனே, தானே நகரங்கள்  இருந்துள்ளன.
 
2009-10 நிதியாண்டில்  டெல்லியின் தனி நபர் வருமானம்  ரூ.1 லட்சத்து  17 ஆயிரம், ஆனால் மும்பையில்  தனி நபர் வருமானம்  ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், ஆனால் டெல்லி தனி நபர்  வருமானம் 2010-11-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 36 ஆயிரமாக  உயரக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
யுனியன் பிரதேசங்களை  கணக்கில் எடுத்துக் கொண்டால் சண்டிகாரின் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 28 ஆயிரமாகும். நாடு தழுவிய சராசரி தனி நபர் வருமானம் ரூ.54 ஆயிரத்து 527.
 
மும்பை தவிர மராட்டியத்தில் 32 மாவட்டங்களை  கணக்கில் எடுத்துக் கொண்டு 2009-10 நிதியாண்டின் தனி நபர் வருமானம் ரூ.56 ஆயிரம் கடந்த  ஆண்டில் இது ரூ.43 ஆயிரத்து  822 ஆக  இருந்தது.
 
2009-10 நிதியாண்டில் ஒட்டு  மொத்த   மராட்டிய மாநிலத்தின் தனி நபர் வருவாய் ரூ.74 ஆயிரத்து 27 இது கடந்த ஆண்டை விட  ரூ.10 ஆயிரம் அதிகம்.  

No comments: