புரூசெல்ஸ், மார்ச். 29-
உலகம் வெப்ப மயமாதலை தடுக்கும் நடவடிக்கையில் உலகநாடுகள் ஈடுபட்டுள்ளன. கார்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் இருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடினால் வானில் உள்ள ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எனவே, கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை தடுக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதன்படி, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் 2050-ம் ஆண்டில் கார்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த 40 ஆண்டுகளில் 60 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு வெளியாவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறையை கழிக்க 50 சதவீதம் பயணத்தை விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment