பிரகாஷ் பாண்டே படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தான். “கிராப்ட் அண்ட் டிசைன்” பாடப் பிரிவில் அதிக நாட்டம் இருந்தது.
இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் “கிராப்ட் அன்ட் டிசைன்” பிரிவில் சர்டிபிகேட் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வை பிரகாஷ்பாண்டே எழுத விரும்பினான். இதற்காக பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தான். அவனுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைத்தது.
இந்த தேர்வை பிரகாஷ் பாண்டே சிறப்பாக எழுதி வெற்றி பெற்றுள்ளான். அவனுக்கு 76 சதவீத மார்க் கிடைத்தது. வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இவ்வளவு சின்ன வயதில் மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றது கிடையாது. இதற்காக இந்திராகாந்தி பல்கலைக்கழகம் சார்பில் அவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment