வாஷிங்டன், ஜன. 4-
ரத்த பரிசோதனை மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக ஊசி மூலம் அதிக அளவில் ரத்தம் எடுத்து பரிசோதனை நடத்தப்படுகிறது.
ஆனால் ஒரு துளி ரத்தம் முலம் புற்று நோயை கண்டுபிடித்து விட முடியும். இத்தகைய நவீன தொழில் நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகர ஆராய்ச்சியாளர்கள் உலகின் முன்னணி மருத்துவ கம்பெனி உதவியுடன் ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் மூலம் மார்பகம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்களை கண்டறிந்துள்ளனர். தற்போது இதே முறையில் உலகின் பல நாடுகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரத்த பரிசோதனைக்கு “மைக்ரோசிப்” பயன்படுத்தப்படுகிறது.
இந்த “சிப்” வழியாக ரத்தம் செலுத்தப்படுகிறது. அப்போது புற்று நோயை ஏற்படுத்தும் “செல்” அதில் பந்து போன்று ஒட்டிக்கொள்கின்றன. இச்சோதனை புற்று நோயாளிகளின் உடலில் வலியை ஏற்படுத்துவதில்லை.
தற்போது புற்று நோய் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து ஆபரேசன் மூலம் தசைகளை எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் கடும் வலியும், வேதனையும் அடைகின்றனர்.
No comments:
Post a Comment