Thursday, January 20, 2011

உலகின் 7 புதிய அதிசயங்கள் அறிவிப்பு; தாஜ்மகாலுக்கு முதலிடம்; இணைய தளம் மூலம் தேர்வு

லண்டன், ஜன 20-
 
உலகில் புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்ய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்னாட் வெப்பர் என்பவர் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. யுனஸ்கோ அமைப்பும் வாக்கெடுப்பு மூலம் உலக அதிசயங்களை தேர்வு செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தது.
 
ஆனால் அதையும் மீறி தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. இணைய தளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்து 21 கட்டிடங்கள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.
 
இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதிப்மினார் உள்ளிட்ட கட்டிடங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் எகிப்து பிரமிடை நிரந்தர அதிசயமாக கூறி இருந்தனர். மீதி 7 கட்டிடங்களை தேர்வு செய்ய தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. உலகம் முழுவதும் இருந்து 10 கோடி பேர் ஓட்டு போட்டனர்.
 
இறுதியில் 7 அதிசயங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலை நேற்று போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில் முறைப்படி அறிவித்தனர்.
 
இதில் தாஜ்மகால் முதலிடத்தை பெற்று உள்ளது.  7 அதிசயங்களின் பெயர் மற்றும் அமைந்துள்ள நாடுகள் விவரம்:-
 
1. தாஜ்மகால் இந்தியா
 
2. சீனபெருஞ்சுவர்- சீனா
 
3. பெட்ரா-ஜோர்டான்
 
4. பிரமாண்ட ஏசுநாதர் சிலை பிரேசில்
 
5. மச்சுபிச்சு- பெரு
 
6. மயன்-மெக்சிகோ
 
7. கொலோசியம்- இத்தாலி
 
7 அதிசயங்கள் அறிவிக்கப்பட்டாலும் இதை ஐ.நா. அமைப்போ அல்லது முக்கிய அமைப்புகளோ ஏற்கவில்லை.

No comments: