ஐ.நாவின் வானிலை அவதான மையத்தால், உலகின் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக கடந்த '2010' அறிவிக்கப்பட்டுள்ளது. (World Meterological Organisation) உலக வானிலை மையத்தின் செயலாளர் மிச்சேல் ஜரௌட் இது தொடர்பி விடுத்த அறிக்கையில் ஆசியா, ஆபிரிக்கா, போன்ற வெப்ப வலய நாடுகள் முதல், ஆர்ட்டிக், கிறீன்லாந்து கனடாவின் துருவப்பகுதிகள் வரை பூமியின் அனைத்து பாகங்களிலும் 2010 அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக உணரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
1961-90 வரையான காலப்பகுதியில் இருந்த உலக சராசரி வெப்பநிலையை விட கடந்த 2010 இல் 0.53 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் 1998 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளே உலகின் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளாக கணிக்கப்பட்டிருந்தன. 19ம் நூற்றாண்டிலிருந்து, உலக காலநிலை மாற்றம் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தற்போது 2010 அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வெப்பநிலை அதிகரிப்பினால் ஆர்ட்டிக் வலையத்தில் உருகும் பனிப்பாறைகள் மாதந்தோறும், 1.35 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்கு முழுவதுமாக கரைந்து பரவி விடுகிறது.
கடந்த வருட கோடை காலத்தில் ரஷ்ய காடுகள் தீப்பற்றி எரிந்தமை, பாகிஸ்த்தானை உலுக்கிய வெள்ளப்பெருக்கு, சமீபத்திய அஸ்திரேலியா பிரேசில் மற்றும் சிறிலங்காவில் வெள்ளப்பெருக்கு என்பவற்றிற்கு 2010 இன் உயர்வடைந்த காலநிலையின் செல்வாக்கே முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment