செல்போன், “இண்டர் நெட்” பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை நகரில் மட்டும் செல்போன் பயன்படுத்து வோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. தற்போது செல் போன்களிலும் “இண்டர்நெட்” இணைப்பு வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 4 லட்சம் பேர் செல்போனில் “இண்டர்நெட்” பார்க்கிறார்கள்.
2 லட்சம் மாணவ- மாணவிகள் சென்னை நகரில் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கிறார்கள். இதில் 20 சதவீதம் பேர் செல்போன் மூலம் “இண்டர்நெட்” பயன் படுத்துவது தெரிய வந்துள்ளது.
இதுதவிர கம்ப்யூட்டர் மையங்கள், வீடுகளில் உள்ள “இண்டர்நெட்” இணைப்புகள் மூலமும் மாணவ- மாணவிகள் “இண்டர்நெட்” பார்க் கிறார்கள். சென்னையில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் “இண்டர் நெட்டை” பயன்படுத்தி பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிக் கொள்கிறார்கள். இதுதவிர பாடங்களை பதிவு செய்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், “வீடியோகேம்” போன்ற வற்றுக்கும் இதை பயன் படுத்துகிறார்கள்.
13 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் வயது வந்தோர் மட்டும் பார்க்க கூடிய “சைட்”களை பயன்படுத்தி “செக்ஸ்” காட்சிகளையும் பார்க்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக 20 வயது முதல் 30 வயது வரை உள்ள வர்களே அதிக அளவில் “இண்டர் நெட்”டை பயன்படுத்துகிறார்கள்.
செல்போனில் “இண்டர் நெட்” பயன்படுத்துகிறவர்கள் வரிசையில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள். மும்பையில் 6.4 சதவீதம் பேர் செல்போனில் “இண்டர்நெட்” பார்க்கிறார்கள்.
சென்னைக்கு இதில் 3-வது இடம் கிடைத்துள்ளது. இங்கு செல்போன் வைத்திருப்பவர்களில் 4 சதவீதம் பேர் “செல்போன் இண்டர்நெட்” வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். 20 சதவீதம் பேர் “ஆன்லைன்” வர்த்தகம் செய்கிறார்கள். இதுதவிர செல்போனில் எப்.எம்., மெமரி கார்டில் பதிவு செய்த பாடல்கள் கேட்போர் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment