Saturday, January 30, 2010
ரோபோ வேலைக்காரி
ரோபோ வேலைக்காரி
சியோல்:
தென்கொரியாவை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் இதைத் தயாரித்துள்ளனர். அதற்கு மாக்ரூ & இசட் என்று பெயரிட்டுள்ளனர். மனித உடலைப் போலவே இந்த ரோபோ இருக்கும். மனிதர்கள் குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்வது போலவே செய்யும்.
ஒரே வித்தியாசம் மனிதருக்கு வீட்டு வேலை செய்ததும் சோர்வு, அசதி ஏற்படும். ஆனால், மக்ரூ & இசட் சிறிதும் அசராமல் அடுத்த வேலையைத்
தேடும். இந்த ரோபோவின் தலை, கைகள், கால்கள், விரல்கள் மனிதரைப் போலவே திரும்பும். அதன் மூலம் வீடு துடைப்பது, பெருக்குவது, வாஷிங் மெஷினில் துணிகளை போடுவது ஆகிய வேலைகளை எளிதாக செய்யும். மனிதரைப் போலவே பொருட்களைப் பார்க்கும் திறனும் இதற்கு உண்டாம். இதுபற்றி விஞ்ஞானி பம் ஜோய் கூறுகையில், எதிரே உள்ள பொருட்களைப் பார்த்து, புரிந்து கொண்டு செய்ய வேண்டிய பணிகளை செய்வது இதன்
சிறப்பு. மனிதர்களை இந்த ரோபோ உணரும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment