Tuesday, January 19, 2010

ஒளிரும் கிண்ணம்




துருக்கி நாட்டு வடிவமைப்பாளர்கள் ஒரு கிண்ணத்தை வடிவமைத்துள்ளார்கள். சமையலறையில் நீலநிற ஒளியில் சாதுவாக குளித்துக்கொண்டிருக்கும் அந்தக்கிண்ணம் பார்க்க அழகானது மட்டுமல்ல. நீண்டநாட்களுக்கு பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பதற்கும் உதவுகிறது.
இது எப்படி சாத்தியமாகிறது?

கிண்ணத்தின் மேலிருக்கும் வட்டவடிவ விதானத்திலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களின் நீலநிற ஒளி பழங்களை நீண்ட நாட்களுக்கு அழுகவிடாமல் பாதுகாக்கிறது. இதுமட்டுமில்லாமல் புற ஊதாக்கதிர்கள் ஈகோலி வகை பாக்டீரியாக்களையும் எத்திலீன் வாயுவையும் செயலிழக்கச்செய்கிறது. ஈகோலி பாக்டீரியாக்கள் குடல் நோயை உண்டுபண்ணக்கூடியவை என்பதும், எத்திலீன் வாயு பழங்களை அழுகச்செய்துவிடும் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த சாதனத்தை மின்னேற்றம் செய்து பயன்படுத்தக் கூடியவிதத்தில் வடிவமைத்துள்ளது ஒரு கூடுதல் சிறப்பு.

No comments: