Saturday, January 30, 2010

ஆப்பிள் மர்மம் நீங்கியது – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் நேற்று புதிதாக ஒன்றை அறிமுகம் செய்வதாக
அறிவித்திருந்தது என்ன அதிசயம் நடக்கப்போகுது என்று நினைத்த
அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி புதிதாக பல வசதிகளுடன் ஐபாட்
ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபாட் என்ன வசதிகளை
எல்லாம் கொண்டுள்ளது என்று இனி பார்ப்போம்.






வண்ணத்திரையுடன் தொட்டு பயன்படுத்த்க்கூடிய அழகிய மாடல்.
அனைத்து இணையதளங்களையும் எளிய சொடுக்கில் பார்க்கலாம்.
அதோடு பெரிய கீபோர்ட் வசதியும் உள்ளது கையால் தொட்டும்
இன்புட் கொடுக்கலாம். இபுக் படிக்க , சாலைகளின் மேப் ,
கூகுள் மேப், ஸ்லைட் அன்லாக்,மியூசிக் பிளேயர் ஐடியுன் ,
வீடியோ படம் கிரிஸ்டல் கிளியர் என பல வசதிகளை தாங்கி
வந்துள்ளது. கூகுள் நெக்சஸ் வெளிவருவதற்கு முன் நாம் கால்
பதித்தால் தான் வளரமுடியும் என்று ஆப்பிள் ஐபாட் வெளிவந்துள்ளது.
இந்த அனைத்து சிறப்பம்சங்களை நேற்று தான் ஆப்பிள் நிறுவனம்
அறிவித்தது இந்த எல்லா சிறப்பம்சங்களும் கூகுள் நெக்சஸ்-ல்
வரப்போகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். கூகுளுக்கு இந்த
நேரம் கொஞ்சம் சரியில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
சமீபத்தில் தான் கூகுள் சீன பிரச்சினை அதற்குள் இது வேறு புது
பிரச்சினையா என்று கூகுள் யோசித்துகொண்டிருக்கிறது.இதன் விலை
$499 அமெரிக்க டாலரிலிருந்து தொடங்குகிறது. ஆப்பிள் ஐபாட்
பற்றிய மேலும் சில விபரங்கள்.

- SPECS: 9.7 inch IPS display, 0.5 inches thin, 1.5 pounds in weight.

- MEMORY SIZE: 16, 32, or 64 GB solid state hard drives

- CHIP: 1 GHz Apple A4 chip. It looks like they went in-house to build this thing.

- Wi-Fi: 802.11n

- BATTERY LIFE: 10 hours

- Includes Speaker, Microphone, 30-pin connector, Accelerometer, and compass.

No comments: