2020 க்கு இன்னும் 9 ஆண்டுகள் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10 - 11 சதவீதம் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தலாம் என சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் கூட்டத்தில் கலாம் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வரும் மக்கள் தொகையை ஏற்றுக்கொள்ளும் என அவர் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து பேசிய கலாம், இந்தியாவும் பாகிஸ்தானும் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பணியாற்றும் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.
ஐரோப்பா அமைதிக்காக 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியது. பின்னர் 28 உறுப்பினர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைக்கப்பட்டது. நமது தெற்கு ஆசிய நாடுகளால் ஏன் அது முடியாது என கலாம் கேள்வி எழுப்பினார். எனினும் நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் இல்லாத இந்தியா அவசியம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment