அதுமட்டுமல்லாமல், வாக்குப் பதிவு முடிந்த பின்னரும் மறு தேர்தல் நடத்த முடியும் என்றும் தெரிவத்துள்ள பிரவீன்குமார், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை ரூ.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுவரை 61 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரவீன்குமார், தமிழகத் தேர்தலில் 66,799 மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்றும், 2,88,000 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாக்களிக்க பணம் கொடுத்தாலும், வாக்களிக்க பணம் வாங்கினாலும் ஓராண்டு சிறை உறுதி என்று தெரிவித்த பிரவீன்குமார், மே 13ஆம் தேதி 91 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment