ஜெர்மனியின் ஹனோசர் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் அணில் போன்ற தோற்றமுடைய அமெரிக்க குரங்கு ஜோடி ஒன்று தங்களது இரட்டை குட்டி குரங்குகளுடன் கொஞ்சி விளையாடிய போது எடுத்த படம்
http://mmimages.mmnews.in/gallery/2010/Oct/9073_L_galvpf.gif
Saturday, October 30, 2010
Friday, October 29, 2010
Amazing Images..................
இலையுதிர்காலத்திற்கு பிரியாவிடை கொடுத்து, வெண் பனியை வரவேற்கிறது மேற்கத்தேய உலகம்! இந்த சீசனில் கொண்டாடப்படும் ஹலோவீன் பண்டிகை முன்னிட்டு
ரேய் விலாஃபேன் எனும், அமெரிக்க சிற்ப கலைஞர் உருவாக்கியுள்ள சிற்பங்கள் இவை. பூசனிக்காய்கள், காய்த்துக்குலுங்க பல மாதங்கள். இவர் சிற்பம் செதுக்க 2 மணி நேரம் தான். (நன்றாக உற்றுப்பாருங்கள்! நம்ப முடிகிறதா?)
மார்வெல் காமிக் வரைபடக்கலைஞரான விலாஃபேன், அமெரிக்க சிறுவர் பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். என்னடா யாரும் கண்டுக்கலையே என பல வருடங்களாக கவலைப்பட்டவரை டீவி புரோகிராம் ஒன்று பிரபல்யபடுத்திவிட, இப்போது படு குஷியாகியிருக்கிறார். ஹலோவீன் என்பதால் ஏகப்பட்ட ஆர்டர்கள். அமெரிக்காவின் மினி செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்.
திறமைக்கு கிடைத்த புகழ் தான். ஆனால் என்னதான் இருந்தாலும் தான் சாதாரண பள்ளி ஆசிரியர் தான் என்கிறவர், இப்போது வகுப்புக்கு சென்றால், மேசையில் பூசனிக்காய்களுடன் காத்திருக்கிறார்களாம் இவருடைய மாணவ குழந்தைகள்...

நாராயண மூர்த்தியின் நல்ல ஆலோசனை!
FILE
அதிலும் குறிப்பாக, ஹெச் 1பி விசா பெற்றுக் கொண்டு அமெரிக்காவில் பணி பெற்று, பிறகு பச்சை அட்டை பெற்றுக்கொண்டு அந்நாட்டிலேயே செட்டில் ஆகி விடலாம் என்கிற கண்ணோட்டம் தவறானது என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.
பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய நாராயண மூர்த்தி, “தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி பெற்று இணைந்தால் அமெரிக்கா சென்று விடலாம் என்றும், ஹைச் 1 பி விசா பெற்று அங்கு போய், பிறகு பச்சை அட்டை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடலாம் என்று நமது இளையோர் நினைக்கின்றனர். இது ஒரு தவறான தீர்வென்றே நான் கருதுகிறேன், மிகத் தவறான வாழ்க்கைத் திட்டமும் கூட” என்று கூறியுள்ளார். அத்தோடு நிற்கவில்லை, உறுதியான எதிர்காலத்திற்கான வழியையும் காட்டியுள்ளார், அது முக்கியமானது.
“இளையோர் நல்ல பணியையும் ஊதியத்தையும் இந்தியாவிலேயே பெற வேண்டுமெனில் அவர்கள் அதற்கேற்ற நல்ல பணி வாய்ப்பைப் பெறவேண்டும். இதற்காக நீங்கள் அமெரிக்காவோ அல்லது வேறு ஒரு அயல் நாட்டிற்கோ செல்ல வேண்டும் என்று திட்டமிடக்கூடாது. இந்தியாவிலேயே சிறந்த பணியை பெற்று, இங்கேயே உறுதியாக வாழும் வாய்ப்புகள் உருவாகிவிட்டன. நாங்கள் உருவாக்கியுள்ள அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறந்த தொழில் நெறிஞர்களாக நீங்கள் உருவாக்கிக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சியில் உங்களுடைய எதிர்காலத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும், அதைத் தவிர்த்துவிட்டு நிரந்தரமற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்லக் கூடாது” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
FILE
“நமது நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில் நெறிஞர்களை உருவாக்கக்கூடிய தரமான பள்ளிகளை, கல்லூரிகளை நிறுவ வேண்டும், இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, நம்மால் செய்யக் கூடியதே” என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். நமது நாட்டு மத்திய மாநில அரசுகள் கல்வியை தொழில், வர்த்தகம் ஆகியவற்றை தனியார் மயம், உலக மயம் ஆக்கிவருவதைப் போல, கல்வியையும் தனியார் மயமாக்கி, இப்போது உலகமயமாக்கி வருகின்றன. எனவே தரமான பள்ளிகள், கல்லூரிகள் என்பதெல்லாம் நமது நாட்டில் ஒரு குறுகிய எதிர்காலத்தில் நடந்தேறக் கூடியதல்ல.
ஆனால், பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அணு சக்தி உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப அறிவியல் துறைகளில் உள்ள நிரந்தரமான எதிர்காலம் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இதனை கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)