சென்னை, பிப். 25- தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆண்டு குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு ஆதாயக் கொலைகள் அதிகரித்துள்ளன.
2006-ல் 1273 கொலைகளும், 2007-ல் 1521 கொலைகளும், 2008-ல் 1630 கொலைகளும், 2009-ல் 1644 கொலைகளும் நடந்துள்ளன.
சொத்துக்காக கொலை செய்தல் குற்றங்கள் 2004-ல் 74ம், 2008-ல் 1005ம், 2009-ல் 123ம் நடந்து இருக்கின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் வழிப்பறி கொள்ளைகள் இரு மடங்கு அதிகரித்து இருக்கிறது. 2008-ல் 662 வழிப்பறியும், 2009-ல் 1144 வழிப்பறியும் நடந்துள்ளது. 5 வருடங்ளுக்கு முன் 437 வழிப்பறி தான் நடந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிராக வன்முறைகளும் அதிகரித்து உள்ளன. வரதட்சணை கொடுமைகள், கற்பழிப்பு, செக்ஸ் கொடுமைகள் ஆகியவை அதிகரித்து உள்ளது. அதே சமயம் பெண்கள், சிறுமிகளை கடத்துதல் போன்றவை குறைந்துள்ளது.
2007-ல் 523 பெண்களும், 2008-ல் 573 பெண்களும், 2009ல் 596 பெண்களும் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள்.
நன்றி:
http://www.maalaimalar.com/2010/02/25110718/murder.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment