வாஷிங்டன் : அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், உயர்ந்த வருமானம் மற்றும்
சிறந்த கல்வி பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா வாழ் ஆசியர்கள் 3வது
இடத்தில் உள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் ஆசியர்கள் அதிக படிப்பறிவு
பெற்றவர்களாகவும், கூடுதல் வருமானம் ஈட்டுபவர்களாகவும் உள்ளதாக தி ரோஸ்
ஆஃப் ஆசியன் அமெரிக்கன் என்ற தலைப்பில் ப்யூ ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள
ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் 3.18 மில்லியன் இந்தியர்கள், 4 மில்லியன் சீனர்கள், 3.4 மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆகியோரின் ஆண்டு வருமானம் 88,000 டாலர்களாக உள்ளது. இது அனைத்து ஆசியர்களின் ஆண்டு வருமானமான 66,000 டாலர்களையும், அமெரிக்கர்களின் ஆண்ட வருமானமான 49,800 டாலர்களையும் விட மிக அதிகமாகும். இந்திய அமெரிக்கர்களின் சொந்த ஆண்டு வருமானம் 65,000 டாலர்களாகவும், அனைத்து ஆசிய அமெரிக்கர்களின் வருமானம் 48,000 டாலர்களாகவும், அமெரிக்கர்களின் வருமானம் 40,000 டாலர்களாகவும் உள்ளன. அமெரிக்காவில் வாழும் 70 சதவீதம் இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=490579

No comments:
Post a Comment