கோவா: பணம் கொடுத்து தங்கள் செல்வாக்கை உயர்த்தவும், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள், மீடியாக்களை தவறாக பயன்படுத்துகின்றன என்ற அம்சத்தை கொண்டு பிரசார் பாரதி ஒரு குறும்படத்தை உருவாக்கியிருக்கிறது. இதில் பத்திரிகைகள் எப்படி தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது.
பிரசார் பாரதி, தூர்தர்ஷனுக்காக - உமேஷ் அகர்வால் உருவாக்கியிருக்கும் "புரோக்கரிங் நியூஸ்'. பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பெரிய நிறுவனங்கள் பணம் கொடுத்து நாளிதழ்களிலும், டி. வி.,க்களிலும் கவரேஜ் பெறுவதை காண்பிக்கும்புரோக்கரிங் நியூஸ் என்ற டாகுமென்டரி படத்தில் வரும் சில தகவல்கள் இதோ: * லோக் மத், மஹாராஷ்டிரா டைம்ஸ் மற்றொரு தினசரி, மூன்றிலும், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் பற்றிய வெளியான கட்டுரைகள் ஒரே மாதிரியாக, வார்த்தைக்கு வார்த்தை ஒன்றாக, ஆனால் மூன்று வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்களில் வெளியாகியிருக்கிறது.
* ஆந்திராவில், பி.கே. ராமராவ் என்ற வேட்பாளர் ஈநாடு தினசரியில் நல்ல கவரேஜ் பெற்றதற்கு, ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனுக்கு, இதை தான் தேர்தலுக்கு செய்த செலவாகவும் காட்டியிருக்கிறார் இதுவும் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
* காங்கிரஸ் பீகாரில் சரித்திரம் படைக்கவிருக்கிறது என்று ஒரு இந்தி பேப்பரில் எட்டு காலம் தலைப்புச் செய்தி. தலைப்பைத் தவிர வேறு செய்தி கீழே இல்லை.
* பர்க்கா தத், நிரா ராடியா இருவருக்கும் இடையே கருணாநிதி, ராஜா,, டி.ஆர்., பாலு, கனிமொழி என்று பல திமுக தலைவர்களை குறிப்பிட்டு, மந்திரி பதவி பெறுவது பற்றிய பேச்சின் ஆடியோ குரல்.
* சி.என்.என்., ஐபின் ராஜ்தீப் சர்தேசாய் பர்காதத் சில பத்திரிகை/டிவி ஆசிரியர் திரைப்பட இயக்குனர் மகேஷ் பட், ஷோபா டே போன்றவர் மீடியா துறையில் உள்ளவர்களை பற்றி கருத்துக்கள்.
* ஐபிஎல் கிரிக்கெட்டில் மீடியாவின் பங்கு , திமுக கட்சி பிரமுகர்களுக்கு ( சன்டிவி, கலைஞர் டிவி), அ.தி.மு.க.,வினருக்கு ஜெயா டிவி, விஜய்காந்த - கேப்டன் டிவி, பாட்டாளி மக்கள் கட்சி - மக்கள் டிவி, காங்கிரஸ் - வசந்த் டிவி, கேரளாவிலும், ஆந்திராவிலும் அரசியல் பிரமுகர்கள் ஆதிக்கத்தில் பல டிவி சேனல்கள் இயங்குகிறது. பல டிவி சேனல்களில் பிரத்யேக பேட்டிக்கு, பணம் பெறப்படுவதும், இது 50% பணமாக, 50% செக் மூலமாக பெறுகின்றனர்.என்றும் காட்டப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து, தாங்கள் விரும்பியவாறு செய்திகள், கருத்துக்கள், பப்ளிசிட்டி பெறுவதற்கு அதிகம் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகளா, பெரிய கம்பெனிகளா (வியாபார நிறுவனங்களா), என்பது கடினமான கேள்வி. திரைப்படத்துறையிலும் இந்த ட்ரென்ட் வந்துவிட்டது.
உமேஷ் அகர்வால், ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்து இந்த ஒரு மணி நேர டாகுமென்ட்ரியை உருவாக்கியுள்ளார். கடந்த (30ம் தேதி ) திரைப்பட விழாவில், திரையிடப்பட்டபோது, அரங்கு நிரம்பியது. படத்தை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக, கேள்வி-பதில் விவாதம் நடைபெற்றது. பிரசார் பாரதியிடமிருந்து இந்த படத்தின் டி.விடி பெறலாம். லஞ்சமற்ற இந்தியா விரும்பும் அனைவரும் பார்த்தால் நல்லது.
சமீபத்தில் கூட , பணம் பெற்ற செய்திகள் நாளிதழ் மற்றும் டிவியில் வெளியிடுவது குறித்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் இரு நிபுணர்கள் கொண்ட கமிட்டி, விஷயத்தை முழுமையாக ஆராய்ந்து, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கம், இணைய தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. - ரஜத்
No comments:
Post a Comment